உம்மை சார்ந்து நிற்கிறேன்

 

உம்மை சார்ந்து நிற்கிறேன்

நான் தோற்றுபோவதில்லை

உம்கிருபையில் வாழ்கிறேன்

நான் வெட்கப்படுவதில்லை

 

நிற்பதும் நிற்மூலம் ஆகாததும்

உந்தனின் நல்ல கிருபை

வழுவாமல் என்னை காப்பதும்

உந்தனின் வல்ல கிருபை - உம்மை

 

நிற்கிறேன் என்று எண்ணுவதில்லை

ஆகையால் நான் வீழ்வதில்லை

என்னால் என்று எண்ணவில்லை

மேட்டிமை நான் கொள்வதில்லை - உம்மை

 

அடைந்தேன் என்று நினைப்பதில்லை

ஆசையாய் நான் தொடருவேன்

பிடித்துகொண்டேன் என்பதில்லை

இலக்கை நோக்கியே நானும் செல்வேன் - உம்மை

 

தாழ்ந்திருக்கவும் கற்று கொண்டேன்

ஆகையால் நான் சோர்ந்திடேன்

எந்தனின் எல்லா நிலமையிலும்

மனரம்மியமாக நானிருப்பேன் - உம்மை